இனி அவர்களுக்கு விளையாட அனுமதியில்லை.. சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய தடை.! ஐசிசி அறிவிப்பு!!

இனி அவர்களுக்கு விளையாட அனுமதியில்லை.. சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய தடை.! ஐசிசி அறிவிப்பு!!



transgender-not-allowed-to-play-in-international-cricke

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும். பந்துவீச்சில் நேரத்தை மீறினால் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆணிற்குரிய தன்மையை கொண்ட ஒருவர் அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு பெண்ணாக மாறியவர்கள் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே,உள்ளூர் போட்டிகளில் பாலின தகுதி வரைமுறையை பின்பற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களே முடிவு செய்து கொள்ளலாம். சர்வதேச பெண்கள் விளையாட்டின் நேர்மை மற்றும் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த  முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.