இன்று தொடங்குகிறது ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023: ஆவலில் ரசிகர்கள்.!Today ICC Men Cricket World Cup 2023 Begins 

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது போட்டித்தொடரை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. 

10 நாடுகள், இந்தியாவில் உள்ள வெவ்வேறு மைதானங்கள், மொத்தமாக 48 போட்டிகளில் விளையாடுகின்றனர். அக்டோபர் ஐந்தாம் தேதியான இன்று முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை போட்டிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இந்தியாவில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் வைத்து நடைபெறுகின்றன. 

இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணி அளவில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி வைக்கப்படுகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை உருவாக்கியுள்ளது.