விளையாட்டு

CPL 2020: இறுதிப்போட்டியில் அசால்டாக வென்று கோப்பையை கைப்பற்றிய டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ்!

Summary:

TKR won the championship. In CPL 2020

கடந்த மாதம் துவங்கிய கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியும் சம்மி தலைமையிலான செயிண்ட் லூசியா சாக்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற TKR அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆரம்பம் முதலே TKR பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் STZ அணியினர் தடுமாறினர். 19.1 ஓவரிலேயே ஆல் அவுட் ஆன STZ 154 ரன்கள் மட்டுமே எடுத்தனர். TKR அணியின் கேப்டன் பொல்லார்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய TKR அணியின் துவக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். வெப்ஸ்டர், சீபர்ட் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் நான்காவதாக களமிறங்கிய டாரன் பிராவோ நேர்த்தியாக விளையாடினார்.

TKR அணி 18.1 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சிம்மன்ஸ் 84, பிராவோ 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிம்மன்ஸ் ஆட்டநாயகன், பொல்லார்ட் தொடர்நாயகன் விருதினை பெற்றனர்.


Advertisement