வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
மழையால் கைவிடப்பட்ட கடைசி டி20.! ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிரிக்கெட் சங்கம்.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல் 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும், கடைசி 2போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, நான்காவது ஓவரில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது.
நேற்றைய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு 50 சதவீத கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.