கோலி, கோலி என்று கோஷம் எழுப்பிய ஐதராபாத் ரசிகர்கள்..!! வெறுப்பில் முகம் சிவந்த கவுதம் கம்பீர்..!!

கோலி, கோலி என்று கோஷம் எழுப்பிய ஐதராபாத் ரசிகர்கள்..!! வெறுப்பில் முகம் சிவந்த கவுதம் கம்பீர்..!!



There was a moment of commotion in the ground as Hyderabad fans booed Gambhir in Kohli's name.

கோலியின் பெயரால் கம்பீரை வெறுப்பேற்றிய ஐதராபாத் ரசிகர்களால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றியது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 57 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய  58 வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஹென்ரி கிளாசன், அப்துல் சமத் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி தொடக்கத்தில் தடுமாறிய நிலையில் மார்க் ஸ்டோய்னிஸ் 40, மான்கட் 64 மற்றும் இறுதிகட்டத்தில் அதிரடிகாட்டிய நிக்கோலஸ் பூரன் 44 வெற்றி தேடித்தந்தனர்.

இதற்கிடையே, ஐதராபாத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 19 வது ஓவரை வீசிய லக்னோ வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான்  3 வது பந்தை ஐதராபாத் அணியின் அப்துல் சமத் எதிர்கொண்டார். இடுப்பளவுக்கு மேலாக புல்டாசாக வந்த அந்த பந்தை நோ-பால் என்று அம்பையர் அறிவித்தார். அம்பையரின் முடிவை எதிர்த்து லக்னோ அணி அப்பீல் செய்த போது அது நோ-பால் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், ஐதராபாத் அணியினர் தங்கள் அதிருப்தியை தெரிவித்துடன் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட ஐதராபாத் ரசிகர்கள் தங்கள் அணிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, கையில் இருந்த தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை டக்-அவுட் பகுதியில் அமர்ந்து இருந்த லக்னோ அணியினரை நோக்கி வீசினர்.

இதனால் எரிச்சல் அடைந்த அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர், ஆலோசகர் கவுதம் கம்பீர் அங்கிருந்து எழுந்து ரசிகர்களை நோக்கி கை நீட்டி எச்சரித்தனர். இதனை தொடர்ந்து கோலி, கோலி என்று கூப்பாடு போட்ட ரசிகர்களால் கம்பீர் இன்னும் வெறுப்படைந்தார். இதன் காரணமாக போட்டி 5 நிமிடத்திற்கு மேல் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.