விறுவிறுப்பான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்த இந்திய அணி..!

விறுவிறுப்பான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்த இந்திய அணி..!


The Indian team tasted victory by 3 runs

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸில் வென்ற ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான்-சுப்மான் கில் ஜோடி தொடக்கத்தை ஏற்படுத்தியது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஜோடி ஓவருக்கு ஒன்று, இரண்டு பவுண்டரி வீதம் விளாசி ஸ்கோரை உயர்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களால் பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததால் இந்த ஜோடியினர் பந்துகளை சுலபமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். சுப்மான் கில் 36 பந்துகளில் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 14 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை சேர்த்தது.

அணியின் ஸ்கோர் 119 ஐ எட்டிய போது, அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. பந்தை அருகில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓட முயற்சித்த சுப்மான் கில் (64) ரன்களில் நிகோலஸ் பூரனால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து தவானுடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக ஆடினார். ஷிகர் தவான் 3 ரன்னில் தனது 18 வது சதத்தை தவற விட்டு ஏமாற்றமளித்தார்.

இதனை தொடர்ந்து தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் (54) ரன்களிலும்  சூர்யகுமார் யாதவ் (13) ரன்களிலும், சஞ்சு சாம்சன் (12) ரன்களிலும் வெளியேறினர். பின்னர் கைகோர்த்த  தீபக் ஹூடாவ (27) ரன்கள், அக்‌ஷர் பட்டேல் (21) ரன்கள் சேர்த்ததன் மூலம் அணியின் ஸ்கோர் 300 ஐ தாண்டியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது.

பின்னர் 309 ரன்கள் இலக்கை துரத்திய இண்டீஸ் அணிக்கு சாய் ஹோப் மற்றும் கெயில் மேயர்ஸ் ஜோடி தொடக்கம் அளித்தது. இந்த ஜோடியில் சாய் ஹோப் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் மேயர்சுடன், சாமர் பூரூக்ஸ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. திடீர் திருப்பமாக பூருக்ஸ் (46) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கெயில் மேயர்ஸ் (75) ரன்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் நிகோலஸ் பூரன் (25) ரன்கள், ரோவன் பவல் (6) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் (54) ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை வேகமாக உயர்த்திய அகேல் ஹூசைன் (32) ரன்களும், ரோமோரியோ செப்பர்டு (39) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ய்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி இந்த போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.