வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான வீரர்கள் தேர்வு ஒத்திவைப்பு! அடுத்த தேர்வு எப்போது?

வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான வீரர்கள் தேர்வு ஒத்திவைப்பு! அடுத்த தேர்வு எப்போது?



Team india selection postponed for west indies tour

அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால் கடைசி நேரத்தில் தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு காரணம் பிசிசிஐ தலைவர் அமிதாப் சௌத்ரி ஒரு வழக்கால் ராஞ்சியில் இருந்து மும்பைக்கு வர முடியாததால் தான். 

BCCI

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அணித் தேர்வானது, வீரர்கள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையயிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வீரர்களின் உடல்நிலை ஆய்வுக்கான முடிவுகளும் இன்னும் வரவில்லையாம். இதனால் இன்று நடைபெறவிருந்த வீரர்கள் தேர்வானது வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.