அரசியல் தமிழகம் விளையாட்டு

கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்! அமைச்சர் ஜெயக்குமார் வீசிய பந்தை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

Summary:

tamilnadu cm playing cricket


சென்னை கண்ணகி சிலை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று காலை நடைபெற்றது. விளையாட்டை துவங்கி வைப்பதற்காக வெள்ளை நிற உடைகளை அணிந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினார். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம் என்று கூறினார். பின்னர் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். அப்போது அதில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் முதலில் பந்துவீச, அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து அசத்தியது, அங்கிருந்த அதிகாரிகளை வெகுவாக கவர்ந்தது.


அமைச்சர் ஜெயக்குமார் வீசிய பந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டையால் பந்தை விளாசினார். இதைப் பார்த்த அதிகாரிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


Advertisement