உலகக்கோப்பையை வென்ற அணிகளுக்கான பரிசு விபரம்: இந்திய அணிக்கு மட்டும் அதிகம்... ஏன் தெரியுமா.?

உலகக்கோப்பையை வென்ற அணிகளுக்கான பரிசு விபரம்: இந்திய அணிக்கு மட்டும் அதிகம்... ஏன் தெரியுமா.?



t20-world-cup-tem-won-prices-details

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

டி20 உலக கோப்பையை போட்டிகளில் மொத்த 16 நாடுகள் பெங்கு பெற்றது அந்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை விவரம் வெளியாகியுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி 13.84 கோடியை பரிசுத்தொகையாக பெறுகிறது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி 7.40 கோடியை பரிசுத்தொகையாக பெறுகிறது.

t20 world cupஅதேபோல் அரை இறுதியில் தோல்வி அடைந்த மற்ற அணிகளுக்கு ரூ.4.19 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விட கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு ரூ.4.50 கோடியும், நியூசிலாந்து அணிக்கு ரூ.4.19 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு ரூ.1.53 கோடியும் ,தென்னாப்பிரிக்கா அணிக்கு ரூ.1.20 கோடியும், வங்காள தேச அணிக்கு  ரூ.1.20 கோடியும், இலங்கை அணிக்கு ரூ.1.85 கோடியும், ஆப்கானிஸ்தான் அணிக்கு ரூ.56.35 லட்சமும், நெதர்லாந்து அணிக்கு ரூ.1.85 கோடியும்,  ஜிம்பாப்வே அணிக்கு ரூ.88.50 லட்சமும், அயர்லாந்து அணிக்கு ரூ.1.53 கோடியும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.64.40 லட்சமும், ஸ்காட்லாந்து அணிக்கு ரூ.64.40 லட்சமும், நமீபியா அணிக்கு ரூ.64.40 லட்சமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.64.40 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.