மிக பிரபல மற்றும் முக்கிய வீரரை அணியில் இருந்து கழட்டிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.. யார் தெரியுமா??suresh-raina-not-retained-by-csk

சுரேஷ் ரெய்னாவை சென்னை அணியில் இருந்து கழட்டிவிட்டுள்ளது சென்னை அணி நிர்வாகம்.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபில் தொடரில் தோனி  தலைமையிலான சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் அனைத்து அணிகளும் அடுத்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகளுக்கு தயாராகிவருகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபில் போட்டியில் லக்னோ, அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படுகிறது.

suresh raina

இந்நிலையில் தற்போதுள்ள அணிகளின் வீரர்கள் கலைக்கப்பட்டு விரைவில் மெஹா ஏலம் நடைபெற உள்ளது. அதேநேரம் தற்போது உள்ள அணிகள் தங்கள் அணியில் இருக்கும் ஏதாவது நான்கு வீரரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். அந்தவகையில் சென்னை அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகிய நான்குபேரையும் தக்கவைத்துள்ளது.

suresh raina

சின்னதால என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் விட்டுள்ளது. கடந்த சீசனில் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு சரியாக இல்லாததால் சென்னை அணி அவரை தக்கவைக்கவில்லை என கூறப்படுகிறது.