இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் வார்னர் படைக்கு ஏற்படவிருக்கும் பின்னடைவு.! என்ன காரணம்?

இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் வார்னர் படைக்கு ஏற்படவிருக்கும் பின்னடைவு.! என்ன காரணம்?


sunrisers-hyderabad-team-player-injured

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடக்கும் 17வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் உள்ளது.

எனவே இன்று நடக்கும் போட்டியில் யார் வெற்றிபெற்றாலும் புளிப்பாட்டியலில் முன்னிலைக்கு செல்வோம் என்ற நோக்கில் இரு அணிகளும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கனவோடு களமிறங்கவுள்ளது. இரு அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள் இருப்பதால் இன்றைய ஆட்டம் நடக்கும் சார்ஜா மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் தான் முக்கியம் என எதிர்பார்க்கப்படுகிறது.

sunrisers hyderabad

அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிறந்த பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் தொடையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் பதிலேயே வெளியேறினார். ஆனால் தற்போது அவரது காயம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இதனால் அவர் சரியான நேரத்தில் குணமடையத் தவறினால், சந்தீப் சர்மாவை களமிறக்க சன்ரைசர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்றால் கடந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற ஹைதராபாத் வார்னர் படைக்கு சற்று பின்னடைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது.