உலகிலேயே முதன்முறையாக தெரு கிரிக்கெட் உலக கோப்பை தொடர்; எங்கு தெரியுமா?

உலகிலேயே முதன்முறையாக தெரு கிரிக்கெட் உலக கோப்பை தொடர்; எங்கு தெரியுமா?



street-cricket-world-cup-2019---england---londen

கிரிக்கெட் விளையாட்டு இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளது. தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருப்பதால் போட்டியை கண்டுகளிக்க ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இத்தொடர் முடிந்ததும் உலகக்கோப்பை போட்டி தொடர் ஆரம்பமாக உள்ளது. 

இந்நிலையில், தெரு கிரிக்கெட்டுக்கே என்று தனியாக உலக கோப்பை போட்டி தொடரானது லண்டனில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் விளையாடுபவர்கள், விளையாடியவர்கள் அனைவருமே தெரு கிரிக்கெட் விளையாடி இருப்பார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. பெரிய மைதானம் கிடைக்காத சூழலில் தங்களுக்கு என்று விதிகளை வகுத்துக் கொண்டு ஆடும் விளையாட்டு தான் தெரு கிரிக்கெட். இதற்கு முதன் முறையாக உலக அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை அனைவருக்கும் அளித்துள்ளது எனலாம்.

cricket

இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, நேபாளம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 10 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்தியாவிலிருந்து தென் இந்தியா, வட இந்தியா என இரு அணிகள் பங்கேற்க உள்ளது. இதில் ஒரு அணிக்காக சென்னையை சேர்ந்த நான்கு சிறுவர்களும் மும்பையைச் சேர்ந்த 4 சிறுவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த அந்த நான்கு சிறுவர்களும் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்து மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவர்கள் வடசென்னையில் உள்ள கருணாலயா பொது சேவை மையத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.