
Stones collapsed panjab vedrri
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடஸ் அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் டெல்லி அணியின் மார்கஸ் ஸ்டாய்னிஸ்.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் மட்டும் சற்று நிலைத்து நின்றனர். ஆனால் 15 ஓவரில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
எப்படியும் 130 ரன்களுக்குள் டெல்லியை சுருட்டி விடலாம் என நினைத்த பஞ்சாப் அணியின் கனவை தவிடு பொடியாக்கினார் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ். கடைசி நேரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 157 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் விக்கெட்டுகளும் ஆரம்பத்தில் மளமளவென சரிந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் துவக்க ஆட்டக்காரர் மயங் அகர்வால் மட்டும் நிலைத்து நின்று கடைசி வரை போராடினார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது பஞ்சாப் அணிக்கு. பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ஸ்டாய்னிஸ் கடைசி ஓவரை வீசினார். முதல் 4 பந்துகளில் 6, 2, 4, 0 என வெளுத்து வாங்கினார் அரைசதம் அடித்த மயங். வெற்றிக்கு 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது.
ஆனால் 5 ஆவது பந்தில் துரதிஷ்டவசமாக தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மயங். பின்னர் கடைசி பந்திலும் ஜோர்டன் விக்கெட்டை கைப்பற்றினார் ஸ்டாய்னிஸ். ஆட்டம் டையில் முடிந்தது.
அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி நிரண்யித்த 3 ரன்கள் இலக்கை டெல்லி அணி அசால்டாக அடித்து வெற்றிபெற்றது. பஞ்சாப் அணியின் வெற்றி கனவை ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் தட்டிப் பறித்துவிட்டார்.
Advertisement
Advertisement