கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ஆஸ்திரேலிய வீரர்.!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ஆஸ்திரேலிய வீரர்.!


stew smith beat sachin record

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இந்தநிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை  முறியடித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

sachin

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 391 ரன்கள் குவித்தது . இந்த போட்டியில் 59 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் முதல் 150 இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் 7,993 ரன்களை குவித்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் முதல் 150 இன்னிங்சிற்கு பிறகு 7,913 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (7,869) ஆகியோர் சாதனையை முறியடித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்.