நள்ளிரவு 1 மணிக்கு கூடவா இப்டி..! ரகசியமாக வீடியோ வெளியிட்ட ஸ்டீவ் ஸ்மித் மனைவி..! பிரமிக்கும் ரசிகர்கள்.!!

நள்ளிரவு 1 மணிக்கு கூடவா இப்டி..! ரகசியமாக வீடியோ வெளியிட்ட ஸ்டீவ் ஸ்மித் மனைவி..! பிரமிக்கும் ரசிகர்கள்.!!


steve smith wife shared her husband video

இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டதால் அணியின் தலைவராக ஸ்மித் நியமிக்கப்பட்டார். 

ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது டெஸ்ட் நடந்து கொண்டிருந்த போது, கடந்த 19-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு தன்னுடைய பேட்டை எடுத்து சரி பார்த்து, பயிற்சி எடுத்துள்ளார். அப்போது இதனைக்கண்ட கண்ட அவரின் மனைவி உடனடியாக விடியோவை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.