விளையாட்டு

மனுஷன் இதுக்குத்தான் கட்டி புடிச்சாரா!! சுரேஷ் ரெய்னா இதை எதிர்பார்க்கள!! சிரித்து என்ஜாய் செய்த சக வீரர்கள்..!

Summary:

சென்னை அணி வீரர்கள் அணியின் பயிற்சியாளர் பிளமிங்-க்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை சிஎஸ்க

சென்னை அணி வீரர்கள் அணியின் பயிற்சியாளர் பிளமிங்-க்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஐபில் T20 சீசன் 14 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது நாள் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் ஐபில் போட்டி ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து அணி வீரர்களும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை அணி வீரர்களும் தங்கள் பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். இதில், கடந்த ஆண்டு அணியில் இருந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங்-க்கு சென்னை அணி வீரர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். பிளமிங் கேக்கை வெட்ட, அதை அணியின் கேப்டன் தோனி எடுத்து அவருக்கு ஊட்டி விடுகிறார். பின்னர் அங்கிருந்த வீரர்கள் கேக்கை எடுத்து பிளமிங்கின் முகத்தில் தடவுகின்றனர்.

உடனே பிளமிங் தனது அருகில் இருந்த சுரேஷ் ரெய்னாவை பாசத்துடன் கட்டிப்பிடிப்பதுபோல் கட்டிப்பிடித்து, தனது முகத்தில் இருக்கும் கேக்கை அவர் மீது தடவுகிறார். பின்னர் சக வீரர்கள் அனைவரும் கேக் சாப்பிட்டு தங்கள் கொண்டாட்டத்தை தொடர்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement