விளையாட்டு

மலிங்கா, திமுத், மேத்யூஸ் ஆகிய மூவரின் அதிரடி முடிவால் சோகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Summary:

srilankan players not intrest play in pakistan


2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.


இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் கருணாரத்ன, டி-20 அணித்தலைவர் மலிங்கா மற்றும் மூத்த வீரர் மேத்யூஸ் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மாட்டோம் என்று இலங்கை வாரியத்திற்கு தெரிவித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்த தொடர், நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கையுடன் உள்ளது. இந்த போட்டி நடக்குமா நடக்காதா என உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 


Advertisement