விளையாட்டு

அச்சு அசல் மலிங்கா போலவே பந்துவீசும் மற்றொரு வீரர்! வைரலாகும் வீடியோ உள்ளே.

Summary:

Srilankan player bowl same as malinga video goes viral

உலகளவில் பிரபலாமான பந்து வீச்சாளர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மலிங்கா. IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியாகவும் இவர் விளையாடிவருகிறார். இவரது பந்து வீச்சு மிகவும் வித்தியாசமானது மேலும் பயங்கர வேகமானதும் கூட. யாக்கர் வீசுவதில் சிறந்த வீரரான மலிங்கா தற்போது இலங்கை அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் மலிங்க இலங்கை அணியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து மலிங்கா போல் இன்னொரு வீரர் இலங்கை அணிக்கு எப்போது கிடைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில் மலிங்கா போலவே பந்து வீசும் மற்றொரு இலங்கை வீரரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

நுவன் துஷாரா என்னும் 24 வயது இலங்கை வீரர் ஒருவர் அச்சு அசல் மலிங்காவை போலவே பந்து வீசுகிறார். அவர் இதுவரை ஐந்து ஒருநாள் போட்டியிலும், 14 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதுகுறித்து நுவன் கூறுகையில் நான் மலிங்கா போலவே பந்து வீசுவதாக அனைவரும் கூறுகின்றனர்.

நான் அவரை காப்பி அடிக்கவில்லை. இயற்கையாகவே தனக்கு அந்த மாதிரி பந்து வீச வருவதாக கூறியுள்ளார். 


Advertisement