ஆசிய கோப்பை 2023: இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை; இந்திய அணிக்கு பின்னடைவா..?!!

ஆசிய கோப்பை 2023: இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை; இந்திய அணிக்கு பின்னடைவா..?!!


sri-lanka-won-the-toss-and-decided-to-bat-first-in-the

ஆசிய கோப்பை 2023 இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.

லீக் சுற்றின் முடிவில், இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. நேபாளம், ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின. சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்ற இலங்கை இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதிபெறுவது இது 11 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி கொழும்பில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்திய அணி தரப்பில் பேட்டிங்கை பொறுத்தவரை சுப்மன் கில் (275), ரோஹித் சர்மா (194), லோகேஷ் ராகுல் (169), விராட்கோலி (129), இஷான் கிஷன் (120) ரன்களுடன் நல்ல நிலையில் உள்ளனர், பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும்  ஹர்டிக் பாண்டியாவும் உள்ளிட்டோர் வலு சேர்ப்பர்.

சூப்பர்-4 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ள இந்திய அணி கூடுதல் உத்வேகத்துடன் களமிறங்கும். தனது முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் 7 வது முறையாக கோப்பையை கைப்பற்றி இந்திய அணியின் சாதனையை சமன் செய்ய இலங்கை மல்லுக்கட்டும். இதன் காரணமாக இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதன் படி அந்த அணியின் தொடக்க ஜோடி பதும் நிசங்கா-குஷால் பெரோரா ஜோடி களமிறங்க உள்ளனர்.