இந்திய அணியை தனி ஒருவனாக கதறவிட்ட இலங்கை வீரர்.! இறுதியில் இப்டி ஆகிடுச்சே.!!

இந்திய அணியை தனி ஒருவனாக கதறவிட்ட இலங்கை வீரர்.! இறுதியில் இப்டி ஆகிடுச்சே.!!


sri-lanka-won-by-7-wkts-in-yesterday-match

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த டி20 தொடரில் முதல் போட்டியை இந்தியாவும், நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இலங்கையும் வென்றது. இந்நிலையில் நேற்று நடைபெற இருக்கும் கடைசிப் போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற முனைப்புடன் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய படிக்கல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குல்தீப் யாதவ் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், ஷனாகா 2 விக்கெட்டுகளையும், மெண்டிஸ் மற்றும் சமீரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

india vs srilanka

இதனையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி,  14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியுள்ளது. இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா ஒற்றை ஆளாக, இந்திய அணியை கதறவிட்டார். இவர் 4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.