முன்னனி பந்துவீச்சாளர்கள் கூட செய்யாததை செய்த நடராஜன்.. தமிழக வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!srh-pacer-natarajan-records-in-yorker

இந்த ஐபிஎல் தொடரில் யார்க்கரில் புதிய சாதனையை படைத்துள்ளார் சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது துல்லியமான பந்துவீச்சாள் எதிரணியினரை மிரட்டி வருகிறார்.

இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசிய நடராஜன் வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் நடராஜனின் பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

T NATARAJAN

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமான யார்க்கர் பந்துகளை வீசியுள்ள பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார் நடராஜன்.  5 போட்டிகளில் அவர் 21 யார்க்கர் வீசியுள்ளார்.

யார்க்கர் மன்னன் பும்ரா, ரபடா மற்றும் சமி இவர்களை விட நடராஜன் இந்த தொடரில் அதிகமான யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் யார்க்கராக வீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.