இது வெறும் ஆரம்பம் தான், மீண்டும் முழு பலத்துடன் வருவோம் - ஸ்ரேயஸ் ஐயர் கண்ணீர் மல்க பேட்டி

இது வெறும் ஆரம்பம் தான், மீண்டும் முழு பலத்துடன் வருவோம் - ஸ்ரேயஸ் ஐயர் கண்ணீர் மல்க பேட்டி


Sreyas iyer about lose againt chennai

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் விக்கெட்டுகள் ஆரம்பத்தில் இருந்தே சரியத் துவங்கியது. ரிஷப் பந்த் மட்டும் நிலைத்து நின்று ஆடி 38 ரன் எடுத்தார். 

IPL 2019

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் மற்றும் டூப்ளஸிஸ் அரைசதம் அடித்து அணியை வெற்றிபெற செய்தனர். இதனால் டெல்லி அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உறைந்தனர். 

ஆட்டம் முடிந்த பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் சோகத்துடன் பேசினார். அப்போது பேசிய ஸ்ரேயஸ், "நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எங்களால் ரன் குவிக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் முக்கியமான வீரர்கள் அணைவரும் அவுட்டாகிவிட்டனர். ஆட்டத்தை எடுத்து செல்ல நல்ல பார்டனர்ஷிப் அமையவேயில்லை. 

IPL 2019

இருப்பினும் இந்த தொடரில் எங்கள் அணியினர் ஆடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். கேப்டனாக நானும் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன். இது எங்களுக்கு சிறப்பான தொடராக அமைந்தது. இது வெறும் துவக்கம் தான். அடுத்து வரும் தொடர்களில் நிச்சயம் முழு பலத்துடன் மீண்டு வருவோம்" என கூறினார். 

கடந்த சீசனில் முதலில் கேப்டனாக இருந்த கம்பீர் தொடர் தோல்விக்கு பிறகு விலகியதால் 24 வயதேயான ஸ்ரேயஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அனுபவம் அதிகம் இல்லாத இளம் வீரர்களை கொண்டு டெல்லி அணி இந்த நிலைக்கு வந்ததை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.