விளையாட்டு Bigg Boss

சச்சின் கூறிய வார்த்தைகளால் கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீசாந்த்; அப்படி என்ன கூறினார் சச்சின்?

Summary:

sreesanth cries about talking sachin

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் பின்னர் ஊழல் புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் விளையாடுவதற்காக பிசிசிஐ-ஆல் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இவரால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனாலும் தனது திறமையை திரையுலகில் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  அவர் தனது சக போட்டியாளர் அனூப் என்பவரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர் குறித்து நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய படம்

ஸ்ரீசாந்த், ``2011 -ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை நாங்கள் கைப்பற்றிய பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு நேர்காணல்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்தன. வீரர்கள் அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். அதுபோன்று ஒரு நிகழ்ச்சியில், கேள்விகளைக் கேட்பவர், அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்து பேசி வந்தார். அந்தப்பட்டியலில் எனது பெயர் வரவில்லை. அவர் முடிக்கும் தருவாயில் குறுக்கிட்ட சச்சின், `ஸ்ரீசாந்த் சிறப்பாக விளையாடினார். இந்தக் கோப்பையைக் கைப்பற்றியதில் அவரின் பங்கும் முக்கியமானது’ என்று தெரிவித்தார். அந்தத் தருணத்தில் நான் அழுதே விட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். 


Advertisement