சினிமா விளையாட்டு

பொது இடத்தில் மனைவியின் செருப்பை கையில் பிடித்து வந்த பிரபல கிரிக்கெட் வீரர்!

Summary:

sreesanth carries sandals of his wife

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தனது மனைவியின் செருப்பை பொது இடத்தில் தனது நண்பர்களின் முன்பே கையில் எடுத்து வரும் காட்சி வைரலாகி வருகிறது.

2005 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடியவர் கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த். காலத்தில் மிகவும் ஆக்கிரோஷமாக ஆடும் இவர் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவார். ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார்.

sreesanth க்கான பட முடிவு

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஆறாவது சீசனில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி டெல்லி போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து இவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இவர் சமீபத்தில் ஹிந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் 12 சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

ஸ்ரீசாந்தின் மனைவி ரிச்சா மும்பையை சேர்ந்த பேஷன் டிசைனர் ஆவார். சமீபத்தில் மனைவியுடன் வெளியில் சென்றிருந்த ஸ்ரீசாந்த் எதிர்பாராதவிதமாக தனது மனைவியின் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது மனைவி ரிச்சா ட்விட்டரில் பதிவிட்டு "கணவர்கள் இப்படி இருக்க வேண்டும்" என கூறியுள்ளார். 


Advertisement