இந்தியா விளையாட்டு WC2019

அரையிறுதிக்குள் நுழைகிறதா தென்னாப்பிரிக்கா அணி? தற்போதைய நிலை என்ன?

Summary:

South africa will go to next level


உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 9 போட்டிகள் முடிவுற்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. மொத்தம் 10 அணிகள் விளையாடிவரும் முதல் சுற்றில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

2019 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெறுமா என்ற கேள்விக்குறியில் உள்ளது. இந்த உலகக்கோப்பையில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்து உள்ளது.

world cup 2019 south africa க்கான பட முடிவு

உலகக்கோப்பையில் இதுவரைக்கும் தென்னாப்பிரிக்கா அணி சொதப்பிய படியே ஆடிவருகின்றது. சிறந்த பந்து வீச்சாளர்களும், சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் இருந்தும் அந்த அணிக்கு தோல்வி அடைவது, அந்த அணிக்கு ராசி இல்லை என்றே கூறலாம். உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்ல தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியாக 6 போட்டிகளுக்கு மேல் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. உலக அளவில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்குள் நுழையவேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


Advertisement