வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்.! 6 வீரர்கள் டக் அவுட்.. சுருண்டு விழுந்த வங்கதேசம்.!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்.! 6 வீரர்கள் டக் அவுட்.. சுருண்டு விழுந்த வங்கதேசம்.!


six player duck out in bangladesh

வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுபயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

வங்கதேச அணியின் துவக்க வீரர் மஹ்முதுல் ஹசன் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார்.அடுத்ததாக களமிறங்கிய ஷாண்டோவும் டக் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய மொமினுல்லும் டக் அவுட் ஆனார். அடுத்ததாக லித்தன் தாஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் வங்கதேச அணி 103 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிராத்வெயிட் 42 ரன்களுடனும், போன்னெர் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் வங்கதேச அணியில் 6 வீரர்கள் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.