விளையாட்டு

அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறோம்.. தோனியின் ஓய்வு குறித்து சிவகார்த்திகேயன் ட்வீட்!

Summary:

Sivakarthikeyan thanks ms dhoni for entertaining

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியினை முதல் இடத்திற்கு கொண்டு சேர்த்தவர் தோனி.

இந்திய அணிக்காக சர்வதேச உலகக்கோப்பைகள் மற்றும் அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர் தோனி. தன்னுடைய கேப்டன் பொறுப்பை கோலியிடம் ஒப்படைத்துவிட்டு தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடியவர் தோனி.

தலைமையில் பொறுமை, எதிரணியினரை துல்லியமாக கணிப்பது, விக்கெட் கீப்பிங்கில் விவேகம், பேட்டிங்கில் சரியான திட்டமிடல் என பன்முகத் திறமை கொண்ட தோனி தனது ஹெலிகாப்டர் ஷாட் மூலம் அனைவரையும் கவர்ந்தவர்.

நேற்று திடீரென தோனி ஓய்வினை அறிவித்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், "எங்களை ஊக்குவவித்தவரும் சந்தோஷப்படுத்தியவருமான தோனிக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் ஒரு உன்னதமான தலைவர். எங்களை மகிழ்விக்க நீங்கள் வேறு ஒரு யுக்தியை வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


Advertisement