இந்திய அணியைவிட்டு தூக்கி வீசப்பட இருக்கும் முக்கிய வீரர்! அவருக்கு பதில் வளர்ந்துவரும் இளம் வீரர்!

இந்திய அணியைவிட்டு தூக்கி வீசப்பட இருக்கும் முக்கிய வீரர்! அவருக்கு பதில் வளர்ந்துவரும் இளம் வீரர்!


sikar-dhawan-reaplaced-player

டெஸ்ட் போட்டிகளிலேயே ஆக்ரோஷமாக ஆடி இரட்டைச் சதங்களை குவித்து வரும் மயங்க் அகர்வாலை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது ஷிகர் தவானின் ஆட்டம் நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வரும் நிலையில் மயங்க் அகர்வால் அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் பேசப்பட்டுவருகிறது. இந்தநிலையில் ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வாலை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவு பெருகிவருகிறது.

sikar

கடந்த உலகக்கோப்பையின் போது மயங்க் அகர்வால், விஜய் சங்கருக்குப் பதிலாக அணியில் சேர்ந்தார், ஆனால் போட்டிகளில் விளையாட மயங்க் அகர்வாலுக்கு  வாய்ப்பு கிடைக்கவில்லை.

மயங்க் அகர்வாலின் ஆட்டத்தை பற்றி புகழ்ந்து பேசலாம். அவர் ஆடும் ஸ்டெயிலே ரசிகர்களை அதிகப்படியாக கவரும். எனவே இனி வரும் ஆட்டங்களில் மயங்க் அகர்வால் முக்கிய வீராராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.