ஹைதராபாத் போட்டியை பார்க்க நேரில் வந்த பிரபல நடிகை! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

ஹைதராபாத் போட்டியை பார்க்க நேரில் வந்த பிரபல நடிகை! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க


Shruthihaasan watched hyderabad match at stadium

ஐபிஎல் தொடரின் 8வது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹைதராபாத் அணி ஒரு ஓவர் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நேற்றைய இந்த போட்டியை காண நடிகர் கமல்ஹாசனின் மகளான சுருதிஹாசன் தனது தோழிகளுடன் நேரில் சென்றிருந்தார். ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக ஆராவாரம் செய்த சுருதிஹாசன், தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட செல்பியை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

shruthi hasan

சென்னை அணிக்கு ஆதரவு அளிக்க வராமல், ஹைதராபாத் அணிக்கு மட்டும் ஆதரவு அளிக்க மைதானத்திற்கு வந்த சுருதிஹாசனை, சென்னை ரசிகர்கள் சற்று ஆதங்கத்துடன் பேசி வருகின்றனர். 

shruthi hasan

சுருதிஹாசனை பொறுத்தவரை தமிழைவிட தெலுங்கில் தான் ரசிகர்கள் அதிகம். தமிழில் இவருக்கு சொல்லும்படியாக எந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கேற்றார் போல் தனது அன்பை ஹைதராபாத் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார் சுருதிஹாசன். 

shruthi hasan

தமிழில் 2010 ஆம் ஆண்டு அறிமுகமான சுருதிஹாசன் தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், தெலுங்கை தவிர ஹிந்தியிலும் நடித்து வருகிறார் சுருதிஹாசன். 

View this post on Instagram

IPL time !!!

A post shared by @ shrutzhaasan on