உன் தலையில் இருக்கும் முடியை விட என்னிடம் அதிகமாக பணம் இருக்கு!சேவாக்கை கலாய்த்த அக்தர்!

உன் தலையில் இருக்கும் முடியை விட என்னிடம் அதிகமாக பணம் இருக்கு!சேவாக்கை கலாய்த்த அக்தர்!


shoaib akhtar talk about virendar


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்,
வீரேந்திர ஷேவாக்கின் தலையில் இருக்கும் முடிகளின் எணணிக்கையை விட தன்னிடம் அதிக பணம் இருப்பதாக கிண்டலாக கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவில், சோயப் அக்தரருக்கு பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார், என கூறியிருந்தார்.


இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக அக்தர் வெளியிட்டுள்ள வீடியோவில் சேவாக்கை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அக்தர் வெளியிட்ட வீடியோவில், எனது நண்பர் ஷேவாக் பேசிய வீடியோ வைரலாகிவிட்டது. அக்தருக்கு பணம் தேவை என்பதால் இந்தியாவை புகழ்கிறார் என அவர் பேசியுள்ளார்.

ஷேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது. நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.