
Shikhar dhawan injury team india morale world cup 2019
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆத்ரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் சிறப்பாக விளையாடி 117 ரன் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்நிலையில் ஆத்ரேலியாவுடனான போட்டியில் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மூன்று வாரத்திற்கு ஆருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தவான் அடுத்த மூன்று வாரத்திற்கு எந்த போட்டிகளிலும் விளையாடமாட்டார்.
இந்தியா நாளை நியூசிலாந்து அணியுடனும், வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியுடனும் விளையாடவுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் என்பதாலும், எதிர் அணிகள் இரண்டும் வலுவான நிலையில் இருப்பதால் தவானின் இந்த விலகல் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கவாஸ்கர், இந்திய அணி தவானை மட்டும் நம்பி இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஏற்கனவே தயாரிப்புகளுடன் இருப்பார். எனவே இந்த சூழ்நிலை இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமையாது என அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement