உனக்கு ஐந்து கோடியே அதிகம்! முக்கிய வீரரை தூக்கி எறிந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!Shikar dawan left from sunrisers and playing for delhi

ஐ.பி.எல் ஆரம்பமாகப் போகிறது என்றாலே ரசிகர்கள் உற்சாகமாக தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஐ.பி.எல் ரசிகர்கள் ஏராளம். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் சொல்லவே தேவை இல்லை. 

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தின் போது ரைட் டூ மேட்ச் ஆப்சன் மூலம் ஐந்து கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஷிகர் தவானை ஐதராபாத் அணி தக்க வைத்துக் கொண்டது. இதனை அடுத்து ஐதராபாத் அணிக்காக ஷிகர் தவான் ஆடி வந்தார். இந்த நிலையில் திடீரென ஷிகர் தவான் டெல்லி அணிக்கு அடுத்த ஐ.பி.எல்லில் விளையாட உள்ளதாக தகவல் வெளியானது.

Shikar Dhawan

இந்த தகவலை சன் ரைசர்ஸ் ஐதராபாத் தலைமையும் உறுதிப்படுத்தியுள்ளது. நடைபெற்ற ஏலத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானை ஐந்து கோடியே இருப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சன் ரைசஸ் அணி. ஆனால் அந்த தொகை போதாது என தவான் அடம்பிடித்துள்ளார். அணிக்கான கட்டுப்பாட்டை மீறி எங்களால் செயல்பட முடியாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனால் இரு மனதாக இருந்த தவானை அணியைவிட்டு அனுப்புவதுதான் அவருக்கும் நல்லது, அணிக்கும் நல்லது என ஐதரபாத் தெரிவித்துள்ளது.