எனக்கு ஒரு நியாயம்; தோனிக்கு ஒரு நியாயமா? பிசிசிஐ மீது சேவாக் பாய்ச்சல்

எனக்கு ஒரு நியாயம்; தோனிக்கு ஒரு நியாயமா? பிசிசிஐ மீது சேவாக் பாய்ச்சல்


Shewag insisted about dhoni retirement

என்னை மட்டும் என்னிடம் எதையும்  கேட்காமல் அணியை விட்டு நீக்கினீர்கள் ஆனால் இப்போது மட்டும் மூத்த வீரர்களை நீக்க ஏன் தயக்கம் என சேவாக் பிசிசிஐக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்திய அணியில் தோனியின் தலைமை வந்த பிறகு ஆரம்பத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்த சச்சின், சேவாக், கங்குலி, கம்பீர் என அடுத்தடுத்து அணியிலிருந்து விலகினர். இவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

shewag

சேவாக், கங்குலி, கம்பீர் ஆகியோர் அணியைவிட்டு செல்வதற்கு தோனி தான் காரணம் என பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு ஏற்பட்ட நிலை தான் தோனிக்கு உருவாகி வருகிறது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இதுகுறித்து சேவாக் பேசியுள்ளார். 

அப்போது பேசிய அவர், "நான் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டேன். ஆனால் அதில் வெளிப்படை தன்மை இல்லை. என்னை அணியில் இருந்து நீக்கும் போது என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் வீரர்களை நீக்கினால் அவர்களிடம் தெரிவிக்கப்படும்.

shewag

ஆனால் 2007க்கு பின்பெல்லாம் அப்படி நடக்கவில்லை. வீரர்களை நீக்கும் போது அவர்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் மூத்த வீரர்களை நீக்க அணி நிர்வாகம் பெரிய அளவில் யோசிக்கிறது. சில வீரர்களை நீக்க அணி நிர்வாகம் யோசிக்கிறது. இந்திய அணியை எதிர்காலத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்றால் நாம் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்" என தோனியை நீக்க வலியுறுத்தும் படி சேவாக் பேசியுள்ளார்.