தமிழகம் இந்தியா விளையாட்டு

இந்த தமிழக வீரரை விட கூடாது...! ஐபிஎல் ஏலத்தில் பயங்கர டார்கெட்..! ரூ 5.25 கோடிக்கு தட்டி தூக்கிய பிரீத்தி ஜிந்தா.!

Summary:

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. 

இந்த ஏலத்தில், சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக ஆடி வரும் ஷாருக்கான் பெரிய அளவில் கவனம் ஈர்த்து  இருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி இவர் அந்த அணிக்கு வெற்றி தேடி தந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்க பல அணிகள் ஆர்வம் காட்டியது. ஷாருக்கானை எடுக்க டெல்லி, பெங்களூர் அணிகள் ஆர்வம் காட்டியது. முக்கியமாக பெங்களூர் அணி தொடக்கத்தில் இருந்து இவரை கேட்டது. இந்தநிலையில், தமிழக வீரர் ஷாருகானை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ. 5.25 கோடிக்கு எடுத்துள்ளது. இவர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement