வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
இந்திய அணியை பார்த்தா இப்டி சொன்னீங்க மிஸ்டர் ரிக்கி பாண்டிங்.? ஒரே ஒரு புகைப்படத்தால் பங்கமாக கலாய்த்த சேவாக்!
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில், 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. அப்போது கருத்து தெரிவித்த ஆஸி முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணியின் பலமான பந்துவீச்சு இந்திய வீரர்களை கட்டுப்படுத்தி மிகச் சுலபமாக இந்த போட்டியில் வெல்லும். எனக்கு தெரிந்து இந்தியா 200 ரன்களை தாண்டுவதே கஷ்டம்தான் என தெரிவித்தார்.
https://t.co/Z8zqkzZGNe pic.twitter.com/hKPAa3FLoc
— Virender Sehwag (@virendersehwag) January 11, 2021
இந்தநிலையில் இந்திய அணி தற்போதைய நிலவரப்படி 290 ரன்களை தாண்டி சென்றுவிட்டது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர சேவாக், ரிக்கி பாண்டிங்கை கிண்டல் செய்யும் விதமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ரிக்கி பாண்டிங்கை ரிஷப் பண்ட் ஒளிந்திருந்து பார்ப்பது போல இருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சேவாக். அதாவது, இந்தியா 200 ரன்களை தாண்டாது என்ற கருத்தை ரிஷப் பண்ட் முறியடித்துவிட்டார் என அந்த புகைப்படத்தின் மூலம் சேவாக் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி தற்போது 299 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.