விளையாட்டு

2-வது டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி.! ஆரம்பத்திலே ஆஸ்திரேலியாவை மிரட்டிய இந்திய அணி.!

Summary:

2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில் T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரை  ஆடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (26.12.2020) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது. 

இந்தப்போட்டியில் முதல் 15 ஓவர்களுக்குள்ளேயே ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் களம் இறங்கிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டக் அவுட் ஆகியுள்ளனர். ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து  ரன்கள் எடுத்தநிலையில் ஆடி வருகிறது.


Advertisement