விளையாட்டு

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் 29 வயதில் மாரடைப்பால் மரணம்.! அதிர்ச்சியில் சக வீரர்கள்.!

Summary:

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் 29 வயதில் மாரடைப்பால் மரணம்.! அதிர்ச்சியில் சக வீரர்கள்.!

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட்  மாரடைப்பால் காலமானார். 

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட்,19-வயதுக்கு உட்பட்டோருக்கான  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். 21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள அவி பரோட் மரணம், அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதகா சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஹரியானா மற்றும் குஜராத் அணிக்காக விளையாடிய அவி பரோட் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் உள்ள வீரர்கள் உட்பட அனைவரும் அவி பரோட் மறைவால் அதிர்ச்சியும், மிகுந்த சோகமும் அடைந்துள்ளனர்.

அவி பரோட் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது ஆன்மா சாந்தியடையை எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதகவும் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 


Advertisement