தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?
ஆஹா... தோல்வியிலும் சாதனை..! தல தோனியை மிஞ்சிய சஞ்சு சாம்சன்.!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த குவாலிபையர்-1 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதன்மூலம் குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் நாணய சுழற்சியில் தோல்வியடைந்தார். நடப்பு தொடரில் அவர், 15 போட்டிகளில் 13 முறை நாணய சுழற்சியில் தோல்வி அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு சிஎஸ்கே கேப்டன் தோனி, கடந்த 2012ஆம் ஆண்டு சீசனில் 12 முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்தது மோசமான சாதனையாக இருந்த நிலையில், தற்போது சாம்சன் அதனை முறியடித்துள்ளார்.