சினிமா விளையாட்டு

குழந்தை பிறந்து படுகுண்டாக இருந்த சானியா மிர்சாவின் தற்போதைய நிலையைப் பார்த்தீர்களா!! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

Summary:

sania mirza latest photo viral

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் ஏராளமான வெற்றிகளை குவித்து இந்தியாவிற்கு ஏராளமான பெருமையை சேர்த்துள்ளார்.அதனை தொடர்ந்து சானியா  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

அதனை தொடர்ந்து சானியா பாகிஸ்தான் நாட்டிற்காக டென்னிஸ் விளையாட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையிலும், அதனை நிராகரித்து விட்டு இந்தியாவிற்காக மட்டும்தான் எப்பொழுது விளையாடுவேன் என இந்தியா சார்பாக பல போட்டிகளில் கலந்து கொண்டார்.

தொடர்புடைய படம்

இந்நினையில் சானியா மிர்ஸா- சோயப் மாலிக் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து சானியா மிகவும் உடல் எடை அதிகரித்து படுகுண்டாக காணப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் உடல் எடையை குறைப்பதற்காக கடுமையான பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது 26 கிலோவரை  எடையை குறைத்துள்ளார்.

மேலும் கர்ப்ப காலத்தில் மிகவும் எடை அதிகரித்து கொழுகொழுவென இருந்த சானியா தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


 


Advertisement