விளையாட்டு

ஊரடங்கு சமயத்தில் தோனி என்ன செய்கிறார்? முதல் முறையாக அவர் மனைவி வெளியிட்ட புகைப்படம்.

Summary:

Sakshi shares first glimpse of MS Dhoni during lockdown

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா காரமனாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை அனைவரும் வீடுகளிலே முடங்கியுள்ளனர். மேலும், இந்த ஊரடங்கு சமயத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை காட்ட சில பிரபலங்கள் அவ்வப்போது வீடியோ, புகைப்படம் போன்றவாற்றை வெளியிட்டுவருகின்றனர்.

சமீபத்தில், தனது மனைவி அனுஸ்கா சர்மா தனக்கு முடி வெட்டி விடுவதை இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தோனி என்ன ஆனார், என்ன செய்கின்றார் என்ற எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், தனது வீட்டில் தோட்ட பராமரிப்பு பணியில் ஈடுபடும் தோனியை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் தோனியின் மனைவி. இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 


Advertisement