இந்தியா விளையாட்டு

இவர் ஒருவரால் தான் எல்லா மைதானத்திலும் சிக்ஸர் அடிக்க முடியும்! புகழ்ந்து தள்ளிய சச்சின்!

Summary:

sachin talk about yuvaraj

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தங்களுக்குள் உரையாடி ரசிகர்களுடனான தொடர்பை மேம்படுத்தி வருகின்றனர். 

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் “ யுவராஜ்சிங்கால் உலகில் எந்த மைதானத்திலும் சிக்சர் அடிக்க முடியும்" என்றும் அவரை புகழ்ந்து ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார்.

சச்சின் யுவராஜ் சிங்கை புகழ்ந்தது அணைத்து ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கிரிக்கெட் கடவுள் என கூறப்படும் சச்சின் டெண்டுல்கரை பாராட்டி வருகின்றனர். சச்சினிடம் ஒருவர் பாராட்டு வாங்கினால் கண்டிப்பாக அவர்கள் திறமையானவர்களாக தான் இருக்க வேண்டும் என யுவராஜ் சிங்கையும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


Advertisement