அந்த ரெண்டு பேர் இல்லாவிட்டாலும், இந்திய அணி வெற்றி பெறும்.! சச்சின் ஓப்பன் டாக்.!

அந்த ரெண்டு பேர் இல்லாவிட்டாலும், இந்திய அணி வெற்றி பெறும்.! சச்சின் ஓப்பன் டாக்.!



sachin talk about indian teaem

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. 

இதனையடுத்து  இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கில் T 20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

sachin

இந்த டெஸ்ட் முடிந்த பின்னர், விராட் கோலி இந்தியா திரும்புகிறார். ரோகித் சர்மாவும் 2-வது டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு இல்லை. இதனால் மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் இருவரும் இல்லாமல் இந்தியா களம் இறங்குகிறது. ஆனாலும், இந்தியாவால் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு பேட்டிங் உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை போதுமான அளவிற்கு வலிமை படைத்தது. ரோகித் சர்மா இல்லாமல் நியூசிலாந்தை எதிர்கொண்டோம். சில நேரங்களில் வீர்கள் காயம் அடையலாம். இதனால் போட்டியில் இருந்து அல்லது ஒட்டுமொத்த தொடரில் இருந்து வெளியேறலாம். தனிப்பட்ட நபர் யாராக இருந்தாலும், அவர்கள் இல்லாமல் விளையாட தயார் செய்து கொள்ள வேண்டும் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.