இந்தியா விளையாட்டு WC2019

எல்லாம் அப்பொழுதே முடிந்திருக்கும்! 12 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றை போட்டுடைக்கும் சச்சின் டெண்டுல்கர்!

Summary:

sachin talk about 12 years ago

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இப்போது அவர் 2007ஆம் ஆண்டு உலகக்கொப்பை தொடருக்குப் பின்னர் தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அந்த காலகட்டத்தில் எல்லாம் முடிந்துவிட்டதாகக் கருதினேன். அப்போது, இந்திய கிரிக்கெட்டைச் சுற்றி பல விஷயங்கள்  நடைபெற்று வந்தன. ஆனால், எதுவுமே நல்லதாக நடக்கவில்லை. அப்போது, அணியில் சில மாற்றங்கள் நடக்க வேண்டும். அந்த மாற்றம் நடக்காதபட்சத்தில், நான் அணியிலிருந்து விலகும் முடிவில் இருந்தேன்.


அப்போது எனது சகோதரர் என்னிடம், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மும்பையில் அந்த அழகான கோப்பை உன் கையில் இருப்பதை நினைத்துப்பார் என்றார். ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த சச்சின் பின்வாங்கவில்லை. அப்போது, கிரிக்கெட் உலகில் பேட்டிங்கை மாற்றி அமைத்த பெருமை வாய்ந்த ஜாம்பவானும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரருமான சர் விவியன் ரிச்சர்டுசனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. சுமார் 45 நிமிடங்கள் பேசிய அவர், தற்போதுள்ள சூழ்நிலையில் ஓய்வு பெற வேண்டாம் எனவும் தொடர்ந்து விளையாடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அவரிடமிருந்து வந்த அழைப்பு என்னைப் பெரிய அளவில் மாற்றியது. அதனையடுத்து எனது ஆட்டம் முன்பை விட சிறப்பாக மாறியது’ என தெரிவித்துள்ளார். சச்சினின் சகோதரர் கூறியது போலவே, மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பை அவர் வசம் வந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement