கொரோனா பாதித்த சச்சின் டெண்டுல்கர் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்.!

கொரோனா பாதித்த சச்சின் டெண்டுல்கர் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்.!


sachin-health-condition

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அவர் கடந்த மார்ச் 27-ந்தேதி தனது டுவிட்டரில் தெரிவித்தார். இதனால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சச்சின் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


இதுகுறித்து சச்சின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "நான் மருத்துவமனைியிலிருந்து வீடு திரும்பிவிட்டேன், தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருந்த படி ஓய்வு எடுப்பேன். எனக்கு வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. என்னை நன்றாக கவனித்துக்கொண்ட மற்றும் கடந்த ஓராண்டாக ஓய்வின்றி பயணியாற்றி வரும் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.