ஐ.பி.எல் 2022ல் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்.! கோலி, ரோஹித் சர்மா இல்லை.!

ஐ.பி.எல் 2022ல் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்.! கோலி, ரோஹித் சர்மா இல்லை.!


sachin announced ipl 2022 playing eleven players

ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்ததன் மூலம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல் கோப்பையை வென்ற 4-வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹார்திக் பாண்டியா. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர், ஐ.பி.எல் 2022ல் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, கேப்டனாக ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது சிறந்த ஐபிஎல் 2022 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, உம்ரன் மாலிக் இல்லை.

சச்சின் வெளியிட்ட ஐபிஎல் லெவன் வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜாஸ் பட்லர், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், முகமத் ஷமி, பும்ரா, சாஹல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.