மீண்டும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் சச்சின் - சேவாக்! படுகுஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

மீண்டும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் சச்சின் - சேவாக்! படுகுஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்!


sachin and sehwag again t20


இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடக்கும் இந்த  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் மற்றும் லாராவுடன் முன்னாள் வீரர்களான இந்தியாவின் வீரேந்தர் சேவாக், ஆஸ்திரேலியாவின் பிரட் லீ, இலங்கையின் திலகரத்ன தில்ஷன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

sachin

சச்சின், சேவக் ஆட்டத்தினைப் பார்க்க மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் ஒரு பெரும் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு பின்னால் நடக்க இருந்தாலும், ரசிகர்கள் தற்போதில் இருந்தே வரவேற்பு அளிக்கத் துவங்கிவிட்டனர்.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும்.