வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
Ruturaj: ஒரே சிக்சில் டாடா நிறுவனத்தின் காரை படம்பார்த்த ருத்ராஜ்.. சேப்பாக்கில் சம்பவம் செய்த சி.எஸ்.கே..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்ட ஐ.பி.எல் தொடரின் 6வது போட்டி ஏப்ரல் 3ம் தேதியான நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஆட்டத்தில் சென்னை அணி மொத்தமாக 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆட்டத்தில் எம்.எஸ் தோனி மற்றும் ருத்ராஜ் ஆகியோரின் சிக்சரும், மொயீன் அலியின் விக்கெட்டும், தேஷ்பாண்டேவின் பந்துவீச்சும் கவனிக்கப்பட்டன. அதேபோல, ருத்ராஜ் இன்றைய ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை விளாசினார்.
அப்போது, ஒரு சிக்ஸர் நேரடியாக விளம்பரம் மற்றும் பரிசு கொடுப்பதற்கு என வைக்கப்பட்டு இருந்த டாடா நிறுவனத்தின் காரை பதம் பார்த்தது. நல்ல வேலையாக பெரிய அளவிலான சேதம் ஏதும் காருக்கு ஏற்படவில்லை.
Sponsorship car dented by Ruturaj. #CSKvsLSG pic.twitter.com/CUCIEap2EG
— Himanshu Pareek (@Sports_Himanshu) April 3, 2023