இன்று ரசிகர்களை ஏமாற்றிய ரஸ்ஸல்! ஆனாலும் 2 பந்துகளை பறக்கவிட்டார்!

இன்று ரசிகர்களை ஏமாற்றிய ரஸ்ஸல்! ஆனாலும் 2 பந்துகளை பறக்கவிட்டார்!


Russell cheated fans

 


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 37 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. 38 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் லின் அதிரடியாக அடி 47 பந்துகளுக்கு 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நரேன் 8 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து ஆடிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளனர்.

russell

இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்த்த ரஸ்ஸல் 9 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து 2 சிக்ஸர் மட்டும் எடுத்து அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.