கடைசியாக களமிறங்கி ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய ஹெட்மயர்.! பதறிப்போன விராட்.! நூலிழையில் கையை விட்டுப்போன ஆட்டம்.!royal-challengers-bangalore-won-by-1-run

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 22வது லீக் ஆட்டம் நேற்று குஜாராத் மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்றது. அதில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். விராட் கோலி 12 ரன்கள் எடுத்த நிலையிலும், படிக்கல் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல்  20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்அடித்து 75 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

rcb

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் 6 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்மித் 4 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய பிரிதிவி ஷா 21 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய ரிஷாப் பண்ட் மற்றும் ஹெட்மயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹெட்மயர் 17 வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை சிராஜ் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பண்ட் பவுண்டரி மட்டுமே அடித்தார். இறுதியில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி 1 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.