3 முறை இரட்டை சதம் அடித்தாலும் இன்றைய ஆட்டம் தான் ரோஹித் சர்மாவிற்கு சிறப்பு! காரணம் என்ன தெரியுமா?

3 முறை இரட்டை சதம் அடித்தாலும் இன்றைய ஆட்டம் தான் ரோஹித் சர்மாவிற்கு சிறப்பு! காரணம் என்ன தெரியுமா?


rohti sharma new record

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ள ரோகித் சர்மா இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்த முதல் 50 ரன்கள் தான் குறைந்த பந்தில் அவர் அடித்தது.

நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இன்று நடைபெற்றது. இந்திய அணி டாசை இழந்தாலும் முதலில் பேட்டிங் செய்து 336 ரன்களை விளாசியது. இன்றைய போட்டிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தவர் ரோகித் சர்மா. 39 ஓவர்கள் வரை ஆடிய ரோகித் சர்மா 113 பந்துகளில் 140 ரன்களை விளாசினார்.

India vs pakistan

முப்பதாவது ஓவரிலேயே 100 ரன்களை கடந்த ரோகித் சர்மா நான்காவது முறையாக இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக 140 ரணிலேயே எதிர்பாராமல் ஆட்டம் இழந்தார். 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் 23 சதம் மற்றும் 42 அரை சதம் அடித்துள்ளார் ரோகித் சர்மா. ஆனால் இன்றைய போட்டியில் வெறும் 34 ரன்களில் 50 ரன்களை எடுத்தார் ரோகித் சர்மா. 208 போட்டிகளில் ஆடியுள்ள அவர் மிக விரைவாக அடித்த அரை சதம் இதுவாகும். மேலும் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரோகித் சர்மா.